by Vignesh Perumal on | 2026-06-04 08:21 PM
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு ரமேஷ் அவர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, நிர்வாகக் காரணங்களுக்காகத் தற்போது திருக்கோவில் அதிகாரிகள் கூண்டோடு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் முருகன்பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து திருக்கோவில் நிர்வாகம், தூய்மைப் பணிகள், மற்றும் பக்தர்களுக்கான அடிப்படைக் வசதிகள் (முடிக் காணிக்கை செலுத்தும் இடம், தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம்) தொடர்பாகச் சில புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் ரமேஷ் அவர்கள் திருச்செந்தூர் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் இடங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் பிரகாரங்களை ஆய்வு செய்த அமைச்சர், பணிகளில் தொய்வு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் இருந்ததைக் கண்டு, அங்கிருந்த அதிகாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமைச்சரின் இந்த அதிரடி ஆய்வைத் தொடர்ந்து, நிர்வாகத் திறனை மேம்படுத்தும் பொருட்டு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை திருச்செந்தூர் திருக்கோவில் உயர் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கோவிலின் முதன்மை நிர்வாகப் பொறுப்பில் இருந்த இணை ஆணையர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாகப் புதிய இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவிலின் உள் நிர்வாகம் மற்றும் கணக்குகளைக் கவனித்து வந்த உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்களும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடி மாற்றமானது, திருச்செந்தூர் மட்டுமன்றி மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பிற முக்கிய பெரிய திருக்கோவில்களின் நிர்வாகப் பிரிவிலும் நிர்வாகத் திறனை அதிகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த மாற்றத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீகத் தலமான திருச்செந்தூருக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இந்த புதிய அதிகாரிகளின் வருகைக்குப் பின், கட்டணத் தரிசனம் மற்றும் பொதுத் தரிசன வரிசைகள் முறைப்படுத்தப்படும். விஐபி (VIP) தரிசனக் கட்டுப்பாடுகள் சரியாகப் பின்பற்றப்படும். பக்தர்களுக்கான தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று ஆன்மீக அன்பர்களும், உள்ளூர் பொதுமக்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
கொலை செய்துவிட்டு எஸ்கேப் -2 வது கணவனோடு ஜாலி லைப் ! சேலத்தை உலுக்கிய சம்பவம் - 5 ஆண்டுகள் கழித்து சிக்கிய அழகி!! காத்திருந்து கைது செய்த போலீஸ் !!!
பல ஆயிரம் கோடி சொத்து - தொழில் சாம்ராஜ்யத்தில் ஜாம்பவான் ! யார் இந்த ஜெம் வீரமணி ? போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்டாலின் IPS மாற்றம் - நேர்மைக்கு கிடைத்த பரிசு ! அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அநீதியா? - பின்னணி என்ன ? பின்னணியில் யார் ?
ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் - கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல், 4 பேர் கைது ! தேனி போலீஸ் அதிரடி !!
"உறவைத் தவிர்த்த கணவர்" - உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ் எஸ்ஐ ! மனைவி கள்ளக்காதலலுடன் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச் !