by Vignesh Perumal on | 2026-03-11 08:55 PM
திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்ததில், புத்தாநத்தத்தைச் சேர்ந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம், சவுத் இடையபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம் (42). இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள வண்டி கருப்பணசாமி கோவில் எதிரே வந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாகப் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தின் தாக்கத்தில் ஞானசுந்தரம் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அதே நேரத்தில், சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம் உராய்வு காரணமாகத் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே பைக் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் புகையும் சூழ்ந்தது.
இந்தக் கொடூர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஞானசுந்தரம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் எரியும் பைக்கின் தீ அணைக்கப்பட்டது. பின்னர், உயிரிழந்த ஞானசுந்தரத்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சபாநாயகர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்...! உச்சகட்ட எதிர்பார்ப்பு...! முடிவு வெளியீடு...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கைலாசநாதர்..! மாசி மாத தேய்பிறை அஷ்டமி...! 16 வகை அபிஷேகம்...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!
கார் மோதிய விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது..! வாலிபர் துடிதுடித்து பலி...!