by Vignesh Perumal on | 2026-02-03 03:16 PM
பிரான்சில் உள்ள ஒரு மருத்துவமனையில், இளைஞர் ஒருவரின் ஆசனவாய்க்குள் முதல் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டு சிக்கியிருந்த சம்பவம் உலகையே அதிரவைத்தது. மருத்துவ வரலாற்றில் இது மிகவும் விநோதமான மற்றும் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது.
பிரான்சின் தென் பகுதியில் உள்ள துலோன் நகரில் உள்ள Sainte-Musse மருத்துவமனையில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.
சுமார் 8 அங்குல நீளமும், 2 அங்குல அகலமும் கொண்ட ஒரு பீரங்கி குண்டை ஒரு நபர் தனது ஆசனவாய்க்குள் செலுத்திக் கொண்டதால், அது உள்ளே சிக்கிக் கொண்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்தார்.
நோயாளியின் ஆசனவாய்க்குள் இருந்தது வெடிக்கக்கூடிய பீரங்கி குண்டு என்பதை அறிந்ததும், மருத்துவமனை நிர்வாகம் பீதியடைந்தது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டதால், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனையில் இருந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிகிச்சை பெறும் வார்டுகள் உடனடியாகக் காலியாக்கப்பட்டன. புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டு, அவர்கள் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பொருளை ஆய்வு செய்தபோது, அது சேகரிப்பாளர்களிடம் இருக்கும் முதல் உலகப் போர் காலத்து பீரங்கி குண்டு என்பதும், அது தானாக வெடிக்க வாய்ப்பு குறைவு என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அந்த நபருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அடிவயிற்றுப் பகுதியில் சிறிய துளையிடப்பட்டு, பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்த 8 அங்குலப் பீரங்கி குண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
இது குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆசனவாய்க்குள் ஆப்பிள், கத்திரிக்காய் போன்ற பொருட்கள் சிக்கி சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு பீரங்கி குண்டு சிக்கி, அதற்காக மருத்துவமனையையே காலி செய்யும் நிலை ஏற்பட்டது இதுவே முதல் முறை" என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் வயது சில ஊடகங்களில் 88 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க முயற்சி,...??? வாலிபர் தற்கொலை முயற்சி....!!!!
மிரட்டும் தனியார் நிதி நிறுவனம்,....??? தற்கொலை முயற்சி....!!"
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் மறியல் போராட்டம்.....!!!!
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முறைகேடு தேனியில் ஆர்ப்பாட்டம்....!!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதியோர் உதவித்தொகை ஆணை வழங்கிய கலெக்டர் ரஞ்ஜீத் சிங்...!!!