by Vignesh Perumal on | 2026-02-02 03:25 PM
டாக்காவிற்கு அருகே உள்ள பூர்பாச்சல் நியூ டவுன் என்ற அரசுத் திட்டத்தின் கீழ், தகுதியற்ற முறையில் தனது குடும்பத்தினருக்கு 6 மனைகளை (ஒவ்வொன்றும் 10 முதல் 20 கால அளவு கொண்டவை) ஒதுக்கியதாக ஷேக் ஹசீனா மற்றும் அவரது உறவினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பிரதமர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, சட்ட விதிகளை மீறி இந்த மனைகளை அவர்கள் அபகரித்ததாக வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் 2025-ம் ஆண்டு ஜனவரியில் வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கை விசாரித்த டாக்காவின் 4-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ரபியுல் ஆலம், ஷேக் ஹசீனா குற்றவாளி என உறுதி செய்து தண்டனை வழங்கினார்.இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவுடன் சேர்த்து அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவருக்கு 2 வழக்குகளில் தலா 2 ஆண்டுகள் என மொத்தம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அ னைவருக்கும் தலா 1 லட்சம் டக்கா அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் கூடுதல் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் இல்லாத நிலையிலேயே இந்த விசாரணை நடைபெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக இதே போன்ற மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளில் ஹசீனாவுக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், 2024 போராட்டத்தின் போது நடந்த வன்முறைகளுக்காக அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.வ ங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12, 2026 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில் வந்துள்ள இந்தத் தீர்ப்பு ஹசீனா தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது வெளிநாடுகளில் இருப்பதால், அவர்களை வங்கதேசத்திற்கு அழைத்து வர அந்நாட்டு இடைக்கால அரசு (முகமது யூனுஸ் தலைமையில்) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
தேனியில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்.....!!!!!
மதக்கலவரம் தகவல், 144 தடை...! கோர்ட்டில் கலெக்டர் தரப்பு வாதம்...!
மனைவிக்கு நோய் பாதிப்பு...! கணவன் செய்த செயல்...! குடும்பமே அழிந்தது...! பெரும் சோகம்...!
2 ஊழல் வழக்கு...! 10 ஆண்டுகள் சிறை...! முன்னாள் பிரதமருக்கு கோர்ட் உத்தரவு...!
விஜய்க்கு என்ன தெரியும்..! மக்களே எனது பலம்..! 3-ஆம் ஆண்டு..! விஜய் உற்சாக பேச்சு...!