| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் HINDUISM

சபரிமலை தங்க விவகாரம் - தந்திரியிடம் தீவிர விசாரணை ;

by satheesh on | 2026-01-09 06:25 PM

Share:


சபரிமலை தங்க விவகாரம்  - தந்திரியிடம் தீவிர விசாரணை  ;

சபரிமலை சன்னிதான தங்க கொள்ளையில் தோண்டத் தோண்ட புதுப்புது தகவல்கள் அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்ட் தகவல்.  தந்திரி  கண்டரரு ராஜீவரும் காவலில் எடுக்கப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்பதுதான்  விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அமலாக்க இயக்குநரகம் விஷயத்தை கையில் எடுத்ததும் வழக்கு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.  ED இன் கொச்சி பிரிவு, குற்றப்பிரிவால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் அதன் விசாரணையில் பெயரிட்டுள்ளது.  ஏ. பத்மகுமார், என். வாசு, உன்னி கிருஷ்ணன் போத்தி மற்றும் முராரி பாபு ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அடங்குவர்.  ஒருங்கிணைந்த  விசாரணையை    உதவி இயக்குநர் ராகேஷ் குமார் மேற்பார்வையிடுகிறார்.

செய்தியாளர் ; zN.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment