by admin on | 2025-10-01 08:52 PM
திண்டுக்கல் அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது.
திண்டுக்கல், தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் எரியோடு, மத்தனம்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மகன் சிவகுமார்(36) என்பவரை தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைத்தொடர்ந்து சிவக்குமார் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இதுதொடர்பாக புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜ், காவலர் சரவணகுமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிவகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல் -