by admin on | 2025-10-01 02:59 PM
விஜய் சார், நீதி வேண்டும்....
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை பலர் விபத்து என ஒரே வார்த்தையில் கூறி விட்டு, குடும்பத்தை இழந்து தவிக்கும் அவர்களின் உறவினர்களிடம் தங்களது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். இரங்கல் என்று ஒன்றை வார்த்தையில் மட்டும் தெரிவித்தால் போதுமா? நீதி வேண்டாமா....
பசுவின் கன்றுவை தேரேற்றி கொன்ற குற்றத்தை அறிந்து அதற்கு நீதி வழங்கும் பொருட்டு, தனது ஒரே மகன் மீது அதே தேர் ஏற்றி கொன்று பசுவிற்கு நீதி வழங்கினான். மன்னன் மனுநீதி சோழன் என வரலாறு உண்டு. இந்த வரலாற்று கதையை தாங்களும் தங்களது கட்சி நிர்வாகிகளும் பள்ளி பாடத்தில் படித்திருப்பீர்கள். என நம்புகிறேன். அதனால் 41 பேரின் சாவு, விபத்து என்று காரணம் கூறாமல் தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்று, சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதை விட்டு விட்டு தனது கட்சி நிர்வாகிகள் மீது வழக்குகள் பாய்ந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளும். இந்த நேரத்தில் கரூர் உயிர் பலி சம்பவத்திற்கு தனக்கும், தனது கட்சி நிர்வாகிகளுக்கும் பொறுப்பு அல்ல என்ற முறையில் பதில் அளிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை, நீதியை நிலை நாட்ட, சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது தான் ஒரு நல்ல அரசியல் கட்சி தலைவருக்கு அழகு, என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மூத்த பத்திரிகையாளர் ஆர்.சௌந்தர்