by Vignesh Perumal on | 2025-09-30 07:04 PM
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த துயரத்தை ஒட்டி, தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 30, 2025) ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மனது முழுவதும் வலி மட்டுமே இருப்பதாகவும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க. நிர்வாகிகள் குறித்துப் பேசிய விஜய், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் , "சி.எம். சார்... பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம்."
விஜய் தனது வீடியோவில் தெரிவித்ததாவது: "பதற்றமான சூழலைத் தவிர்க்கவே, துயரச் சம்பவம் நடந்தபின் நான் கரூருக்குச் செல்லவில்லை. என் வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை நான் பார்த்ததில்லை. இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே (பொதுக்கூட்டத்திற்கு) கேட்போம். என்னுடைய அரசியல் பயணம் இன்னும் வலிமையாகத் தொடரும். உண்மை ஒரு நாள் வெளிவரும். 5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன்; கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?" என்று கேள்வி எழுப்பினார். மக்கள் உண்மையைச் சொல்லும்போது, கடவுளே வந்து எனக்குச் சொல்வதுபோல் இருந்தது. சீக்கிரம் அனைத்து உண்மைகளும் வெளிவரும்," என்றும் அவர் அந்த வீடியோவில் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வீடியோ வெளியீடு, கரூர் விபத்து குறித்த அரசியல் மற்றும் சமூக விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....