by Vignesh Perumal on | 2025-08-05 08:24 PM
தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலுக்குச் சொந்தமான கட்டளை சொத்துக்களை, கடந்த 28 ஆண்டுகளாக சட்டவிரோதமாக அபகரித்து விற்றதாக, தொழிலதிபர் பி.எம்.எஸ். முருகேசன் மீது இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் வினோத்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் வினோத்ராஜ், இணை ஆணையரிடம் அளித்த மனுவில், "தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான கட்டளை சொத்துக்களை, தொழிலதிபர் பி.எம்.எஸ். முருகேசன், கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக அபகரித்து விற்பனை செய்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கோவில் சொத்துக்களை விற்பனை செய்ய, போலி ஆவணங்கள் தயாரித்து, தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் அவர் ஏமாற்றியுள்ளார்" எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பி.எம்.எஸ். முருகேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்து முன்னணி அளித்த இந்த புகார், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்