by Vignesh Perumal on | 2025-08-05 07:50 PM
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 34 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அதிகாரிகளாகப் (DEO) பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கிலும் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதற்கு இணையான பணி நிலையில் உள்ள தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 34 பேருக்கு மாவட்டக் கல்வி அதிகாரிகளாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவி உயர்வு, பள்ளிக் கல்வித் துறையில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்