| | | | | | | | | | | | | | | | | | |
கல்வி கல்வி

திரவியம் கல்லூரி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டிய தேனி பாராளுமன்ற உறுப்பினர்...!!

by Muthukamatchi on | 2025-06-09 08:51 PM

Share:


திரவியம்  கல்லூரி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டிய தேனி பாராளுமன்ற உறுப்பினர்...!!

திரவியம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா...!!!!

கல்லூரி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டிய தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன்...!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள திரவியம் கல்லூரியில் நேற்று நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரியில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி தாளாளர் டாக்டர்.பாண்டியராஜ் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் டாக்டர்.ஹேமலதா பாண்டியராஜ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் கேஎஸ்.சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவிப்பு செய்தனர்.


அதனை தொடர்ந்து விழாவில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் எம்பி; திரவியம் கல்லூரி இயற்கை எழில் சூழ்ந்த அருமையான கல்லூரி அமைந்துள்ளது என்றும், இக்கல்லூரியை மிகவும் கண்ணியமான முறையில் தாளாளர் பாண்டியராஜன் நடத்தி வருகிறார் என்றும், கல்லூரியில் சிறப்பு நிர்வாக திறனுக்காக கல்லூரி நிர்வாகத்தை மனதார பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.


மேலும் கல்லூரி காலங்களில் தன்னுடன் படித்து இன்று நல்ல நிலைமைக்கு ஆளான ஆர்த்தோ மருத்துவரும் தனது நெருங்கிய நண்பருமான மருத்துவர் வனசேகர் அவர்களை நினைவுகூர்ந்து கல்லூரி காலங்களில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களில் மிகுந்த கவனம் செலுத்தி, தனது அறிவாற்றலை பெருக்கி கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றும், கல்வி மட்டுமே நமது அழியா சொத்தாகும் என தெரிவித்ததோடு திறமை இருந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும் என்று கூறி பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணாக்கர்கள் திகழ வேண்டும் எனவும் பேசினார். கல்லூரி முதல்வர்கள்,  மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment