by admin on | 2025-02-04 07:46 PM
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனையில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கேட்ட போது போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக மதுரை மாவட்டம் முழுவதும் கலெக்டர் 144 தடை உத்தரவு போட்டிருந்தார். நேற்று இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி அவசர வழக்க விசாரிக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்க செயல்பட்டது. அவசர வழக்கா விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டு மாலை நான்கு மணிக்கு மேல் 6 மணிக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள பிற்பகல் 3 மணிக்கு மேல் நீதி அரசர்கள் அனுமதி வழங்கினார்கள்.
ஆர்ப்பரித்த இந்து சமுதாய மக்கள்.. குறுகிய நேரத்திற்குள் பல ஆயிரம் பேர் திரண்டு கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக மாநிலம் முழுவதும் இந்து அமைப்பு தலைவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதில் காவல்துறை மிகவும் கவனமாக இருந்தது. பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த மாநில மாவட்ட கோட்ட பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர். நேற்று இரவு முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் கைது செய்யப்பட்டனர். இன்று உயர் நீதிமன்ற கிளை அனுமதி வழங்கிய பிறகும் திருப்பூரில் காடேஸ்வர சுப்பிரமணி திருப்பரங்குன்றம் கிளம்பிய போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அங்கு இந்து முன்னணி அமைப்பினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் திருப்பரங்குன்றம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதையும் மீறி பல ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து உன்னை முட்டும் கோஷங்களை எழுப்பியது போலீசாரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையும் உளவுத்துறையும் இந்து அமைப்பினர் திரள்வதை கண்காணிப்பதில் கோட்டை விட்டதா?
ஆசிரியர் தி. முத்துக் காமாட்சி
எவிடன்ஸ்