by Vignesh Perumal on | 2025-04-30 03:08 PM
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஏப்ரல் 30, 2025) பொதுமக்கள் திரளாக கூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைப்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், உடனடியாக திரண்டு வந்து டாஸ்மாக் கடை அமையவுள்ள இடத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்றும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை அமைவதால் விபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். "குடியிருப்புக்குள்ள டாஸ்மாக் வேண்டாம்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும், இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!