| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வீடியோ...! போலீசார் வழக்குப்பதிவு...!

by Vignesh Perumal on | 2025-04-30 02:55 PM

Share:


கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வீடியோ...! போலீசார் வழக்குப்பதிவு...!

திருநெல்வேலி டவுனில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் சிறுமியும் சிறுவனும் இணைந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் நடனமாடிய திரைப்படப் பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், சிறுமியும் சிறுவனும் கோவிலின் பிரகாரத்தில் சினிமா பாடலுக்கு முகத்தை சுளிக்கும் வகையிலும், பக்தர்கள் முகம் சுழிக்கும் வகையிலும் நடனமாடியுள்ளனர். இந்த ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே வைரலானது.

கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் சிறுவர்கள் நடனமாடிய இந்த வீடியோ பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல பக்தர்கள் நெல்லை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் நடனமாடிய சிறுவர்கள் யார், அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் சிறுவர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவில்கள் வழிபாட்டிற்கான புனித தலங்கள் என்றும், இதுபோன்ற செயல்கள் கோவிலின் மரியாதையை குறைப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். போலீசார் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment