by Vignesh Perumal on | 2025-04-30 02:32 PM
நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (ஏப்ரல் 29, 2025) சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்திற்கு இடையே வந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்வதற்காக இன்று (ஏப்ரல் 30, 2025) அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கையில், இது வழக்கமான பிசியோதெரபி சிகிச்சை என்றும், காயம் பெரிதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித் குமார் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று விமான நிலையத்தில் நடந்த தள்ளுமுள்ளு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியது. இருப்பினும், இது தீவிரமான காயம் இல்லை என்றும், வழக்கமான சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்புவார் என்ற தகவலால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். அஜித் குமார் விரைவில் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!