by Vignesh Perumal on | 2025-04-30 02:23 PM
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம், சொத்தின் உரிமையாளர்களால் நீதிமன்றத்தின் மூலம் இன்று (ஏப்ரல் 30, 2025) மீட்கப்பட்டது.
சொத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிறைவேற்றுதல் மனுவின் அடிப்படையில், நீதிமன்ற அமீனா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இன்று அந்த இடத்திற்குச் சென்று சொத்தின் சுவாதீனத்தை மீட்டனர். நீண்ட காலமாக அந்த சொத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இன்று சொத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்தின் உரிமையாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளை நிலைநாட்டியுள்ளதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
திருப்பூரில் பரபரப்பு...! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது...!
ரீல்ஸ் போட்டிக்கு பதிவு செய்ய கடைசி நாள் 2026 ஜனவரி 6 எஸ்பி தகவல்
குட் நியூஸ்...! புத்தாண்டு விடுமுறை...! 10 லட்சம் மடிக்கணினி...! AI வசதியுடன் அதிரடி அறிவிப்பு..!
வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாகி இருக்கும்..? அமைச்சர் பேச்சு...! சமாஜ்வாதி கட்சி புகார்..!
விதியை மீறி கல்குவாரி - கைது - போலீசார் இடமாற்றம் - எஸ்பி அதிரடி.!