by Vignesh Perumal on | 2025-03-27 07:34 PM
சட்டப்பேரவைக்கு வரும்போது பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருளுடன் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்கொண்டு வந்துள்ளார். அச்சமயம் அருகில் இருந்த பாமக எம்எல்ஏ சதாசிவத்திடம் “அதிமுக, பாமக, அப்புறம் பாஜக” என திண்டுக்கல் சீனிவாசன் கூறிவிட்டு சென்றார். சதாசிவத்துடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நாங்க எல்லாம் கூட்டணிங்க” என திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார். அதிமுகவினரின் அடுத்தடுத்த பேச்சு, நடவடிக்கைகள் பாஜகவுடன் கூட்டணி உறுதியாவதை காட்டுகின்றன. அமித் ஷாவை 'இரும்பு மனிதர்' என புகழ்ந்து ஏற்கனவே ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டிருந்தார். கூட்டணி பற்றி அமித் ஷாவிடம் பேசவே இல்லை என எடப்பாடி பழனிசாமி நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், சட்டசபை வளாகத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் பாமக, பாஜக கூட்டணிக்கு வருவதாக நான் யாரிடமும் சொல்லவில்லை. எவன்கிட்ட அப்படி சொன்னேன்..? எவனாவது எடுத்திருக்கானா..? அப்படி நான் சொல்லி இருந்தால் எடுத்திருப்பீங்கதானே...? சும்மா இப்படி எல்லாம் செய்தால்..! இதெல்லாம் ஒரு பொழப்பா? என்று பேசியுள்ளார்.
மேலும், கூட்டணி விவகாரம் எல்லாம் நான் பேசக் கூடிய விஷயமே அல்ல.. பொதுச்செயலாளர்தான் பேசனும்.. அதனால் நான் காலையில் அப்படி எல்லாம் கூட்டணி பற்றி சொல்லவே இல்லை எனவும் கூறியுள்ளார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!