by Vignesh Perumal on | 2025-03-27 04:36 PM
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
மேலும், அண்ணாமலையின் மீதான புகாரையும் அமித் ஷாவிடம், பழனிசாமி முன் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் காரணமாக, 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலை இன்று காலை டெல்லி செல்ல இருப்பதாகவும், அங்கு அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களை சந்தித்ததாகவும், அமித்ஷா வை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மற்றொரு மூத்த தலைவர் மூலமாக அமித்ஷா வை சந்திக்க அண்ணாமலை திட்டம் போடப்பட்டுள்ளதாகவும், மேலும், நேற்று டெல்லியில் இபிஎஸ் மற்றும் அமித்ஷா சந்தித்த நிலையில் அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!