| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!

by admin on | 2026-09-10 06:56 PM

Share:


தனியார் துறை வேலை வாய்ப்பு வெளிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!

தேனி மாவட்டம்

மாவட்டநிர்வாகம், மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநிலஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்தவிழிப்புணர்வு வாகனத்தினை மாவட்டஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்,இ.ஆ.ப.,அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்!!!


தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (10.09.2026) மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக /நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.


வருகின்ற சனிக்கிழமை (12.09.2026) அன்று கம்பம், CPU மேல்நிலைப்பள்ளி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், தமிழகம் முழுவதிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள 8000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். வளாகத்தில் நடைபெற உள்ள மாபெரும்


மேலும், பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்துகொள்ள கல்வித்தகுதி 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ, டிப்ளமோ, ஐடிஐ, மற்றும் இதர கல்வித் தகுதிகளுடைய அனைவரும் பங்கேற்கலாம். இம்முகாமில் பங்கேற்க எவ்விதக் கட்டணமும் இல்லை. இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது அனைத்துக் கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்வில், மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலர் திருமதி ரமாபிரபா, உதவி திட்ட அலுவலர் (மகளிர்திட்டம்) திரு.அன்புராஜா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி சுப்பம்மாள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment