| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திண்டுக்கல்லில் பரபரப்பு...! ₹2 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்கள்....!

by Vignesh Perumal on | 2026-06-08 10:03 AM

Share:


திண்டுக்கல்லில் பரபரப்பு...! ₹2 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்கள்....!

இந்திய ரிசர்வ் வங்கியின் ரூ.2 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்களுடன் சென்ற கன்டெய்னர் லாரி, திண்டுக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியில் பழுதாகி நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லாரியில் கோடிக்கணக்கான பணம் இருந்ததால், உடனடியாக திண்டுக்கல் போலீசார் விரைந்து வந்து பலத்த பாதுகாப்பு வழங்கி, வாகனத்தை மீட்க உதவினர்.

இந்திய ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்களை ஏற்றிக்கொண்டு பிரம்மாண்டமான கன்டெய்னர் லாரி ஒன்று, திண்டுக்கல் பழனி பைபாஸ் வழியாக மதுரை - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திண்டுக்கல் புறநகர்ப் பகுதி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாகக் கன்டெய்னர் லாரியின் எஞ்சினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, லாரி சாலையின் நடுவிலேயே பழுதாகி நின்றது. கோடிக்கணக்கான அரசுப் பணம் நடுரோட்டில் நின்றதால், லாரியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதற்றமடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக திண்டுக்கல் மாவட்டக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் நாணயங்கள் இருக்கும் வாகனம் என்பதால், சட்டம் ஒழுங்கு அல்லது பாதுகாப்புப் பிரச்சினை ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் போலீசார் மிகத் தீவிரமாகச் செயல்பட்டனர்.

தகவல் அறிந்தவுடன் திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி (DSP) சங்கர் அவர்களின் தலைமையில், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இவர்களுடன் வேடசந்தூர் நெடுஞ்சாலைத்துறை போலீசாரும் இணைந்து கொண்டனர். கன்டெய்னர் லாரியைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் உடனடியாகப் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். அத்துடன், அந்த முக்கியத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போக்குவரத்தையும் முறைப்படுத்தினர்.

லாரியை அதே இடத்தில் பழுதுபார்ப்பது கடினம் என்பதால், அதனைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர்.


இதையடுத்து, உடனடியாக ஒரு சக்திவாய்ந்த ராட்சத கிரேன் வாகனம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. போலீசாரின் கடுமையான பாதுகாப்புப் பாதுகாப்புடன், அந்தப் பழுதான கன்டெய்னர் லாரி கிரேனில் கட்டப்பட்டு, பத்திரமாக இழுத்துச் செல்லப்பட்டது.

நடுவழியில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரிக்கு, திண்டுக்கல் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மின்னல் வேகத்தில் வந்து உரியப் பாதுகாப்பு வழங்கி, அதனைப் பத்திரமாக மீட்டெடுத்த சம்பவம் பொதுமக்களாலும், வங்கி அதிகாரிகளாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.







நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment