by satheesh on | 2026-02-20 11:50 AM
500 கோடி பங்களாவை காலி செய்த சரத்குமார் – ராதிகா: வாடகை வீட்டுக்குச் சென்றது ஏன்? வைரலாகும் 'வீட்டு' மர்மம் ,,!
தமிழ் திரையுலகில் 'பவர் கப்பிள்' என்று சொன்னால் அது சரத்குமார் - ராதிகா தம்பதிதான். வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை, அரசியல் மேடை முதல் சமூக வலைதளங்கள் வரை இன்றும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த ஜோடியைப் பற்றி சமீபகாலமாக ஒரு செய்தி தீயாய் பரவி வந்தது. "சரத்குமார் தனது 500 கோடி ரூபாய் பங்களாவை காலி செய்துவிட்டு வாடகை வீட்டுக்குச் சென்றுவிட்டார்" என்பதுதான் அந்தச் செய்தி.சுமார் 15,000 சதுரடியில் பிரம்மாண்டமாக ஒரு வீடு. அந்த வீட்டைப் பராமரிக்க மட்டும் 15-க்கும் மேற்பட்ட வேலையாட்கள் தேவை. ஏழு பெரிய கதவுகளைத் திறந்து மூடுவதற்கே ஒரு ஆள் வேண்டும் என்கிற ரேஞ்சுக்கு அந்தப் பங்களாவைப் பற்றி செய்திகள் கிளம்பின. "வீடு ரொம்பப் பெருசாக இருப்பதால், பராமரிக்க முடியாமல் சரத்குமார் குடும்பம் வாடகை வீட்டுக்கு ஓடிவிட்டார்கள்" என சமூக வலைதளங்களில் பல கதைகளுடன் வதந்திகள் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில்,
சரத்குமாரின் 'புதுவித' விளக்கம்!
இந்த 500 கோடி விவகாரத்தைக் கேட்டு சிரித்த சரத்குமார், தனது ஸ்டைலிலேயே இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். "என் வீடு மட்டும் 500 கோடி ரூபாய் என்றால், நான் ஏன் இன்னும் கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கப் போகிறேன்? 25 கோடியில் ஒரு வீட்டை கட்டிவிட்டு, மீதி 475 கோடியை வங்கியில் போட்டுவிட்டு நிம்மதியாக ஓய்வு பெற்றிருக்க மாட்டேனா?" எனக் கேள்வி எழுப்பினார்.
நடந்தது என்ன?
சரத்குமார் அந்த வீட்டை விட்டு தற்காலிகமாக வெளியேறியது உண்மைதான். ஆனால் அதற்குக் காரணங்கள் வேறு, வீட்டின் இரண்டு பக்கமும் பெரிய பள்ளிகள் வந்துவிட்டன. "ஜிம்முக்குப் போகும்போது பால்கனி வழியாகச் சென்றால், பள்ளிக் குழந்தைகள் 'அங்கிள்' என கூப்பிடுகிறார்கள். எங்களின் அந்தரங்கம் பாதிக்கப்படுவது போல் உணர்ந்தோம்," என்கிறார் அவர்.
பள்ளிகள் சுற்றிலும் வந்ததால் காற்றோட்டம் குறைந்துவிட்டதோடு, காலை நேரங்களில் சத்தம் அதிகமாக இருந்துள்ளது. இதனால்தான் அந்த வீட்டை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுவிட்டு, ஒரு வருட காலத்திற்கு 'பிரேக்' எடுக்க முடிவெடுத்துள்ளனர். மார்ச் மாதம் அந்த வீடு மீண்டும் கைக்கு வந்தவுடன், அதைச் சத்தம் கேட்காத (Sound Proof) வீடாக மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ திட்டமிட்டுள்ளனர்.
வீட்டில் பாசம்... தியேட்டரில் மோதும் ஜோடிகள்
சமீபத்தில் ராதிகாவின் தாயார் கீதா ராதா மறைந்தபோது, ராதிகாவுக்குப் பெரும் தூணாக நின்று குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர் சரத்குமார். இப்படி வீட்டில் ஒற்றுமையாக இருக்கும் இந்தத் தம்பதியினர், வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தியேட்டரில் மோதிக்கொள்ளப் போகிறார்கள்! சரத்குமார் நடித்துள்ள 'ஆழி' திரைப்படம் அன்றுதான் வெளியாகிறது. அதே நாளில், ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தாய்க்கிழவி' திரைப்படமும் மோதுகிறது. "வீட்டில் எங்களுக்குள் போட்டி இல்லை, ஆனால் தியேட்டரில் எங்கள் படங்கள் மோதுவது சுவாரசியமான போட்டிதான்" என 'சுப்ரீம் ஸ்டார்' சிரித்துக் கொண்டே கூறினார்.
இணை ஆசிரியர் : zN.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
இரவோடு இரவாக டீலங்கை முடித்த மூவர் கூட்டணி - தேமுதிக கூட்டணியில் இணைப்பு! கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக வைத்த செக் ?
தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - 4 பெண்கள் காயம் !
அரசியலில் திடீர் திருப்பம்...! ஓ.பி.எஸ் அதிரடிப் பேட்டி..!
அமைச்சர் கே.என். நேருவுக்கு நெருக்கடி..! புகாரில் வழக்குப்பதிவு செய்ய...! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
அதிர்ச்சியில் உலக நாடுகள்...! ஏலியன்கள்...! ட்ரம்ப் அதிரடி உத்தரவு..!