| | | | | | | | | | | | | | | | | | |
கல்வி கல்வி

எச்சரிக்கை...! முனைவர் பட்டத்தில் முறைகேடு...! மாபெரும் வியாபாரம்..!

by Vignesh Perumal on | 2026-02-11 07:23 PM

Share:


எச்சரிக்கை...! முனைவர் பட்டத்தில் முறைகேடு...! மாபெரும் வியாபாரம்..!

சமூக அந்தஸ்துக்காகவும், விளம்பரத்திற்காகவும் பெயருக்கு முன்னால் டாக்டர்' (Dr.) என்று சேர்த்துக் கொள்ளும் மோகம் இன்று பலரையும் சட்டத்தின் பிடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. அங்கீகாரம் இல்லாத போலி நிறுவனங்களிடம் கௌரவப் பட்டங்களைப் பெறுவதும், அத்தகைய பட்டங்களை வழங்குவதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் எனச் சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

கல்வி நிறுவனங்கள் என்ற போர்வையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அங்கீகாரம் இன்றிப் பட்டங்களை அச்சிட்டு வழங்குவது மிகப்பெரிய மோசடியாகும். இது அரசு மற்றும் கல்வித் துறையை ஏமாற்றும் 'போலி ஆவணத் தயாரிப்பு' வரம்பிற்குள் வரும்.

இதற்காக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் முந்தைய IPC பிரிவுகளின் கீழ் வழக்கு பாயும். குறிப்பாக, தவறான வாக்குறுதி அளித்துப் பணம் பெறுதல். அங்கீகாரம் இல்லாத சான்றிதழ்களை உருவாக்குதல். திட்டமிட்டு மக்களை ஏமாற்றுதல் போன்ற குற்றங்களில் வழக்கு பதிவு செய்யப்படும் . இக்குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

"தெரியாமல் வாங்கிவிட்டேன்" என்று கூறி தப்பிப்பது இனி எளிதல்ல. ஒரு பட்டம் போலி என்று தெரிந்தே அதைப் பெற்று, அதன் மூலம் பின்வரும் நன்மைகளை அடைந்தால் நீங்களும் குற்றவாளியே, வேலைவாய்ப்பு அல்லது பதவி உயர்வு பெறுதல்.

வணிக விளம்பரங்களில் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்துதல். பொது மேடைகளில் அந்தப் பெயரைப் பயன்படுத்திச் சமூக லாபம் அடைதல்.

நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், அந்தப் பட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவிட்டு, உங்களை ஏமாற்றிய நிறுவனம் மீது காவல்துறை அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்க வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மாற்றப்பட்டு, தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி:

டிஜிட்டல் ஆவண மோசடிகளுக்கும் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மோசடி வழக்குகளில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

யார் வழங்கலாம்? மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்க முடியும்.

யார் வழங்கக்கூடாது? அறக்கட்டளைகள் (Trusts), சங்கங்கள் (Societies), அல்லது 'International University' என்று பெயரிடப்பட்ட தனியார் அமைப்புகளுக்குப் பட்டம் வழங்க அதிகாரம் கிடையாது.

ஏதேனும் ஒரு நிறுவனம் உங்களை அணுகினால், அதன் அங்கீகாரத்தை [UGC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்](https://www.ugc.gov.in/) சரிபார்ப்பது அவசியம்.

உழைப்பால் பெறாத பட்டம் உயர்வைக் தராது; மாறாகச் சிறைத் தண்டனையைத் தரும். பெயருக்கு முன்னால் இரண்டு எழுத்துக்கள் இணைய வேண்டும் என்பதற்காக, உங்கள் வாழ்நாள் முழுவதும் கிரிமினல் என்ற கறையைச் சுமக்க வேண்டாம்.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment