by admin on | 2026-02-04 06:34 AM
தேனி நகர் இந்து எழுச்சி முன்னணி சார்பாகஅல்லிநகரம் வெங்கலாநகரில் பாரத மாதா வழிபாடும், சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவும் மிகச் சிறப்பாகவும் ஆன்மீக எழுச்சியுடனும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் திரு செந்தில்குமார் சுவாமி அவர்கள் உரையாற்றுகையில்,
“சுவாமி விவேகானந்தர் சிவபெருமானின் அவதாரம்.
1893 ஆம் ஆண்டு சிகாகோ மாநாட்டில் இந்து மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும், அதன் ஆன்மீக பெருமைகளையும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.அவரது உரையின் பின்னரே இந்து மதத்தின் மகத்துவம் உலகெங்கும் பரவியது”என்று பெருமிதத்துடன் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து தேனி நகர அமைப்பாளர் திரு கனகுபாண்டி ஜீ அவர்கள்,
“பாரத மாதா நமது தாய். தேசம் உலகின் குருவாக உயர வேண்டும் என்றால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாரத மாதாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்”என்று தேசப்பற்று மிக்க உரையாற்றினார்.bஇந்த நிகழ்ச்சியில்
மாவட்ட பொருளாளர் திரு செந்தில்குமார் சாமி,
மாவட்டச் செயலாளர் திரு இராமமூர்த்தி ஜீ,
மாவட்டத் துணைச் செயலாளர் திரு சுப்பையா ஜீ,
நகர தலைவர் திரு சிவராம் ஜீ,
நகர பொருளாளர் திரு நாகராஜ் ஜீ,
நகர அமைப்பாளர் திரு கனகுபாண்டி ஜீ,
நகர செயலாளர் புயல் ஐயப்பன் ஜீ,
நகர துணைச் செயலாளர்கள் திரு இராமகிருஷ்ணன் ஜீ, திரு இராமநாதன் ஜீ,
செயற்குழு உறுப்பினர் திருமொக்கசாமி ஐயா
மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
தேனி நகர தலைவர் திரு சிவராம் ஜீ அவர்கள் தலைமையில்,
விநாயகர் சதுர்த்தி கமிட்டி தலைவர் திருமதி கிருஷ்ணவேணி,
ஆன்மீக செல்வர் டீக்கடை ரமேஷ்
மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் செய்து இருந்தனர்.
ஆன்மீகம், தேசப்பற்று, சமூக ஒற்றுமை ஆகியவற்றை ஒருங்கிணைத்த இந்த விழா, அனைவரிடமும் தேசிய உணர்வையும் ஆன்மீக விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஒரு நினைவுகூரத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது.
இந்து எழுச்சி முன்னணி தேனி நகர்
ADMK எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது தற்கொலைக்கு சமம்...!!! வழக்கறிஞர் பாண்டியராஜன்...
பொதுமக்கள் தங்களது குறைகள் - கோரிக்கைகளை தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் வெளியீடு ! தேனி கலெக்டர் அறிவிப்பு !!
பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் - சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன்.!
அரசியல் வரலாற்றில் முதல் முறையாக...! சட்டமன்றத்தில்...! பொறுப்புகள்...!
தமிழக டிஜிபி பதவிக்கான ரேஸில் 6 பேர் ! மகேஷ் குமார் அகர்வாலை செலக்ட் செய்யப் போகிறாரா? விஜய் !!