by Vignesh Perumal on | 2025-09-24 02:38 PM
பிரபல நடிகர் ரவி மோகன் இல்லத்தில், வங்கி ஊழியர்கள் ஜப்தி நோட்டீஸ் ஒட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டுக் கடன் தொகையை நீண்ட நாட்களாகச் செலுத்தாததால், தனியார் வங்கி ஒன்று இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நடிகர் ரவி மோகன், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) ஒரு சொகுசு பங்களா ஒன்றை வாங்கி, அதில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். சமீபத்தில், தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்த அவர், அந்த வீட்டிற்குச் செல்வதில்லை.
இந்த நிலையில், வீட்டுக் கடன் தொகையை ரவி மோகன் செலுத்தத் தவறியதால், தனியார் வங்கி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (செப்டம்பர் 24, 2025) வங்கி ஊழியர்கள் அவரது வீட்டிற்குச் சென்று ஜப்தி நோட்டீஸை ஒட்டினர்.
நோட்டீஸில், நிலுவைத் தொகையை விரைந்து செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில், அவரது இல்லம் ஜப்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் குழு.....