| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

நாகூர் தர்கா சார்பில் விருதுகள் வழங்க அழைப்பு...!!!

by admin on | 2025-08-18 12:02 PM

Share:


நாகூர் தர்கா சார்பில் விருதுகள் வழங்க அழைப்பு...!!!

தமிழறிஞர்களை விருதிற்கு பரிந்துரை செய்ய அழைப்பு.


நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் சாஹிப் ஜாதா தமிழ் சங்கம் வருடாந்தோறும் உலகெங்கும் உள்ள தமிழறிஞர்களை கண்டறிந்து நாகூரில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி தங்கள் பகுதியில் தொடர் தமிழ் பணியில் ஈடுபட்டு வரும் தமிழ் மொழி சிறக்க பாடுபட்டு வரும் நபர்களை தாங்கள் இத்தகைய சீர்மிகு தமிழ் செம்மல் விருதிற்கு பரிந்துரை செய்யலாம். தங்களது பரிந்துரையை கீழ்கண்ட தொலைபேசி எண் வாட்ஸப்பிலோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் நபரின் கலர் புகைப்படம், அன்னாரின் வாழ்க்கை குறிப்பு (500 வார்த்தைகளுக்கு மிகாமல்)  அன்னாரின் தமிழ்பணிகள் விபரம் (500 வார்த்தைகளுக்கு மிகாமல்), அன்னார் எழுதிய புத்தக நகல் PDF Format மற்றும் அன்னாரின் முகவரி தொடர்பு என்னுடன் விண்ணப்பிக்க வேண்டும். விருதாளர்கள் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். அதைப்போல் தொடர் மக்கள் சேவையில் இருப்போர்களும் சேவை செம்மல் விருதிற்கு தங்களது சேவையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். விருதாளர்கள் இதற்கு முன் ஏதேனும் விருதுகள் பெற்று இருப்பின் அதன் விபரங்களை ஆதாரத்துடன் இனைத்திட வேண்டும்.விருது தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விழா தினத்தன்று நற்சான்றிதழ்கள் வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்படும். நாகூரில் தங்குமிடம் மற்றும் பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கென எந்த ஒரு கட்டணமும் கிடையாது. 

தங்களது பரிந்துரையை / விண்ணப்பத்தினை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்களுக்கு  அனுப்பி வைக்க கூறப்படுகிறது.

நாகூர் - திரு. தாஹா மரைக்காயர் - +919786962097 / +919750663993

மேட்டுப்பாளையம் -  திரு. அசன் பாவா - +919442975088

திருச்சி - டாக்டர் தமிமுல் அன்சாரி நிஜாமி +917639928309

சென்னை - ஷா நவாஸ் - +918939127229

தெத்தி - ஜாகிர் ஹுசைன் - 918072227413

ஐக்கிய அமீரகம் - ஹாஜா ஹுசைன் - 00971501039598

மின்னஞ்சல் - 9677410786k@gmail.com 

விருது விழா நடைபெறும் நாள் : 05/09/2025

இடம் : நாகூர், நாகப்பட்டினம். மாவட்டம்.

மேலும் தொடர்புக்கு 

தாஹா மரைக்காயர் செயலாளர் சாஹிப் ஜாதா தமிழ் சங்கம்நாகூர்

+919786962097 / +919750663993


தி.முத்து காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர் 9842337244

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment