by Satheesh on | 2025-06-22 12:26 PM
*முருக* *பக்தர்கள்* *மாநாட்டையொட்டி* *மதுரையில்* *இன்று* *போக்குவரத்து* *மாற்றம்* : மதுரையில் இன்று இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார் அதன்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து, *ராமநாதபுரம்* , திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பாண்டிகோவில் சுற்றுச் சாலை, கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர் சுற்றுச்சாலை வழியாக வழக்கமான பாதையில் செல்ல வேண்டும். *ராமநாதபுரம்,* திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து மதுரை வரும் பேருந்துகள் விரகனூர் சந்திப்பில் இருந்து தென் கரை சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை, அண்ணாநகர் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். *மேலூரில்* இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். *கன்னியாகுமரி,* தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் திருமங்கலம், கப்பலூர், சமயநல்லூர், வாடிப்பட்டி வழியாக செல்ல வேண்டும்.*மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல்* விரகனூர் சந்திப்பு வரை பொது மக்களின் கார், இருசக்கர வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. *மதுரை* பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
செய்தியாளர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
கொடைக்கானலில் வாகனங்களுக்கு தடை! கலெக்டர் அதிரடி உத்தரவு !!
காதல் போட்டி - பிளஸ் 1 மாணவன் கொடூர கொலை ! 1 சிறுமி, 1 சிறுவன் உட்பட மூன்று பேர் கைது - அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம் !!
வீரத்தமிழர் மக்கள் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்.…!!!!!
கத்தியை காட்டி வழிப்பறி செய்த கும்பல் ! தட்டி தூக்கிய போலீஸ் !!
டெலிவரி பாயின் சந்தேகம் - சிக்கிய கள்ள நோட்டு மாஃபியா! நீண்ட விசாரணை - தட்டி தூக்கிய போலீஸ்!!