| | | | | | | | | | | | | | | | | | |
வணிகம் வணிகம்

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடும் நபர்களே...! இதை அறிமுகம் செய்ய மெட்டா திட்டம்...!

by Vignesh Perumal on | 2025-06-17 04:56 PM

Share:


வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போடும் நபர்களே...! இதை அறிமுகம் செய்ய மெட்டா திட்டம்...!

உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப்பின் வருவாயைப் பெருக்கும் விதமாக, அதன் ஸ்டேட்டஸ் (Status) பகுதியில் விளம்பரங்களை காட்சிப்படுத்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிற மெட்டா தளங்கள் விளம்பரங்கள் மூலம் கணிசமான வருவாயைப் ஈட்டி வரும் நிலையில், வாட்ஸ்அப் ண்இதுவரை பெரும்பாலும் விளம்பரமில்லா தளமாகவே செயல்பட்டு வந்தது. பயனர்களின் தனியுரிமை மற்றும் பயன்பாட்டு அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளித்த மெட்டா, வாட்ஸ்அப்பை நேரடியாக விளம்பரங்கள் மூலம் பணமாக்குவதைத் தவிர்த்து வந்தது. தற்போது, வாட்ஸ்அப்பின் பெரிய பயனர் தளத்தைப் பயன்படுத்தி வருவாயைப் பெருக்க புதிய வழிகளை மெட்டா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இந்த ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் காட்சிப்படுத்தப்பட உள்ள இந்த விளம்பரங்கள், இன்ஸ்டாகிராமில் காணப்படும் 'ஸ்டோரி' விளம்பரங்களைப் போலவே இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு இடையே முழுத்திரை விளம்பரங்கள் தோன்றும். இவை குறுகிய வீடியோக்களாகவோ அல்லது படங்களாகவோ இருக்கலாம். பயனர்கள் இவற்றைத் தவிர்க்கும் வசதியையும் கொண்டிருக்கும்.

பயனர்கள் மத்தியில் எழுந்துள்ள தனியுரிமை குறித்த கவலைகளைப் போக்கும் விதமாக, வாட்ஸ்அப் ஒரு முக்கிய உறுதிமொழியை அளித்துள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் (Personal Chats) மற்றும் குரூப் சாட்களில் எந்தவிதமான விளம்பரங்களும் இடம்பெறாது என மெட்டா தெளிவுபடுத்தியுள்ளது. இது பயனர்களின் தனியுரிமையை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விளம்பரச் சேவை வாட்ஸ்அப்பின் வருவாயைப் பெருக்குவதுடன், சிறு வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைச் சென்றடைய ஒரு புதிய தளத்தையும் வழங்கும். இது வாட்ஸ்அப்பின் வணிக அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய மாற்றம், அதன் பயனர் அனுபவத்திலும், வணிக மாதிரியிலும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்.




நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment