by Vignesh Perumal on | 2025-05-30 04:30 PM
திண்டுக்கல் நாயுடு மஹாலில், திமுக சட்டத்துறை சார்பில் தென்மண்டல-II 2026 சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாண்புமிகு அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில், திமுக சட்டத்துறை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளங்கோ, வழக்கறிஞர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்களான காந்திராஜன், ஐ.பி. செந்தில்குமார், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் திமுக சட்டத்துறையின் மாநில நிர்வாகிகள், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி வடக்கு, தெற்கு கழக வழக்கறிஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளும் பெருந்திரளாக பங்கேற்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தனியார் துறை தேர்வு முகாம் மூலம் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர் வைத்தியநாதன்....!!!"
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!