by Vignesh Perumal on | 2025-04-01 01:51 PM
2023-இல் அதிமுக-பாஜக. கூட்டணி உடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை, மீண்டும் அதே கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு இடையே தனது பதவியில் இருந்து நீக்கப்படும் எனத் தகவல் கசிந்துள்ளது.
பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க மீண்டும் இணைவதற்கான முதல்படியாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவை அண்மையில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய உடனே, டெல்லியில் அமித்ஷாவுடன் அண்ணாமலை நடத்திய சந்திப்பில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக-அதிமுக கூட்டணி உருவாகும் பட்சத்தில் இரு கட்சித் தலைவர்களுமே கொங்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்களாகவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பது கூட்டணிக்கு பின்னடைவை உண்டாக்கும் என்றும் பாஜக தலைமை மேற்கொண்ட கருத்தாய்வில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது .
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அண்ணாமலைக்கு பதில் புதிய மாநில தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், புதிய மாநில தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் முந்துவதாக தகவல் பரவிவருகிறது. அதுமட்டுமின்றி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனை என தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் முக்கியமாக இந்த தலைவர் மாற்றம் என்பது அதிமுக-பாஜக கூட்டணியை உறுதிசெய்யும் வகையிலேயே மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம் எனத் தகவல் தெரியவந்துள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!