by boopalan on | 2025-03-30 02:27 PM
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: அமித் ஷா கருத்துக்கு கே.பி.முனுசாமி பதில்
அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது அவரது சொந்த கருத்து என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.அதே சமயம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவுடன் மீண்டும் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமாக கூறிவந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும், தமிழ்நாடு நலன் கருதியே சந்தித்ததாகவும் விளக்கம் அளித்தார். ஆனால், அதற்கு அடுத்த நாளே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டார்.
பின்னர், கடந்த வியாழக்கிழமை அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கூட்டணி குறித்து தகுந்த நேரத்தில் தலைவர்கள் பேசுவார்கள் என கூறினார்.
இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்,
உறுதி செய்யப்பட்ட பிறகு அதனை வெளிப்படையாக தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அமித் ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். மேலும் அன்றைய சந்திப்பு தமிழ்நாடு நலனுக்கானது என்றும் அவர் விளக்கமளித்தார்.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!