by Vignesh Perumal on | 2025-03-25 04:54 PM
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (MP,MC) பல்வேறு சம்பளம், அலவன்ஸ் மற்றும் சலுகைகளை அனுபவிக்கின்றனர். சம்பளத்தைத் தவிர, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (MP,MC) தொகுதி அலவன்சாக மாதத்திற்கு ரூ.70,000 மற்றும் அலுவலக அலவன்சாக மற்றொரு ரூ.60,000 பெறுகிறார்கள்.
சலுகைகளைப் பொறுத்தவரை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (MP,MC) தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ சேவையைப் பெறுகிறார்கள். அவர்கள் ஆண்டுதோறும் 34 உள்நாட்டு விமானங்களையும், தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக வரம்பற்ற முதல் வகுப்பு இரயில் பயணத்தையும் இலவசமாக பெறுகிறார்கள்.
இதுதொடர்பாக பார்லிமென்ட் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (MP,MC) சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1,24,000 ஆகவும், டி.ஏ., அலவன்ஸ் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும், ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31,000 ஆகவும், கூடுதல் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.2,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (MP,MC) மற்றும் மாஜி எம்.பி.க்களின் சம்பளம், அலவன்ஸ், ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த உயர்வு ஏப்ரல் 1, 2023 முதல் கணக்கிடப்படுகிறது.
1954 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (MP,MC) சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி செலவு பணவீக்கக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டது என்று அமைச்சகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!