by Vignesh Perumal on | 2025-03-25 04:04 PM
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிட்டுள்ள தேர்வு மற்றும் தேர்வுக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு(TNSET) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டது. அது மார்ச் மாதம் நடைபெற்றது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உதவி இயக்குநர் (உடற்கல்வி) தேர்வு அறிவிப்பானது 232 பணிக்கு வெளியிடப்பட்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும். இணைப் பேராசிரியர் சட்டம் / உதவிப் பேராசிரியர் சட்டம்/உதவி பேராசிரியர் முன் சட்டம் அண்ணா பல்கலைக்கழகம் ஜனவரி மாதம் 132 பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு மே மாதம் தேர்வு நடைபெறும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் 4000 பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜீலை மாதம் தேர்வு நடைபெறும். முதலமைச்சர்கள் ஆராய்ச்சி பெல்லோஷிப் (CMRF) ஜீன் மாதம் 180 மாணவர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெறும். முதுகலை உதவியாளர்கள் பணிக்கு ஆகஸ்ட் மாதம் 1915 பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு நடைபெறும்.
BT உதவியாளர்கள் / BRTE 1205 பணிக்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பர் மாதம் தேர்வு நடைபெறும். தொகுதி கல்வி அலுவலர் (BEO) 51 பணிக்கு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு மார்ச் 2026 ஆம் ஆண்டு தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகக் கல்லூரிகளின் இணைப் பேராசிரியர் / உதவிப் பேராசிரியர் பணிக்கு பல்கலைக்கழகங்களால் கோரப்பட்டபடி/ தேவையின் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!