| | | | | | | | | | | | | | | | | | |
சினிமா General

மேட்டுப்பாளையம் பெண் ஆட்டோ ஓட்டுநர் வேண்டுகோள்

by admin on | 2025-01-21 04:23 PM

Share:


மேட்டுப்பாளையம் பெண் ஆட்டோ ஓட்டுநர் வேண்டுகோள்

மதிப்பிற்குரிய ஐயா. 

நான் குன்னூர்  மேட்டுப்பாளையம்  பஸ்டேண்டு  காந்தி சிலை அருகே  ஆட்டோ ஓட்டி வருகிறேன்.

நான் ஆட்டோ ஓட்ட வந்து இரண்டு வருடங்கள் மேல் ஆகிவிட்டது.கடந்த ஒன் றை வருடங்கள் முன்பு   ஊட்டி பஸ்டேண்டு மகாத்மா காந்தி ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வந்தேன்.நான் பெண் என்பதால்  என்னை ஒதுக்குகிறார்கள்.எனக்கும் என்னுடன் ‌ஆட்டோ ஓட்டி வந்த ஆண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது  . நான் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன் அதன் பேரில் அவர்களை அழைத்து . காவல் ‌ஆய்வாளர் விசாரித்தார் பிறகு.என்னை அவர்களுடன் வேண்டாம் என்று சக ஆட்டோ ‌ஓட்டுனர்கள் ‌கூறியதால் எனக்கு  . மேட்டுப்பாளையம் பஸ்டேண்டு காந்தி சிலை அருகே ஆட்டோ நிரூத்த இடம்  கொடுத்தார்கள்.அங்கு சரியான ‌வாடகை கிடைப்பதில்லை. அப்படியும் எதோ ஒரு சில வாடகை கிடைத்து ஆட்டோ எடுத்து போய் வருவதற்குள்  எனக்கு‌ கொடுத்த இடத்தில் வேறு  யாராவது வண்டியை போட்டு விடுகிறார்கள்.நான் எடுக்க சொன்னால்  . என்னிடம் சண்டை போடுகிறார்கள். என் ஆட்டோ மறைத்து கார் கள் போட்டு கொள்கிறார்கள். ஓட்டுபட்டரை ஆட்டோ ஓட்டுனர்கள்‌ நான் ஆட்டோ ஓட்டும் இடத்தில்  வந்து எனக்கு  

கிடைக்கும் ஒரு சில வாடகையும் எடுத்து செல்கின்றார்கள் இதை 

கேட்டல் என்னை ஓரு பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் ‌பேசுகிறார்கள்.

என் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.என் வருமானம் வைத்துதான்  என் பிள்ளையின்   எதிர்கால மே இருக்கிறது.என் மகளை படிக்க வைக்க தான் ஆட்டோ ஓட்டி வந்தேன். தயவு‌கூர்ந்து எனக்கு நான் முதலில் ஆட்டோ ஓட்டி வந்த மகாத்மா காந்தி ஆட்டோ ஸ்டேண்டில் எனக்கு ஆட்டோ ‌நிருத்தி ஓட்ட இடம் வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.நான் ஓன்றைவருடங்களாக

ஆட்டோ திருத்த இடம் 

கேட்டு இது வரை கிடைக்கவில்லை. பெண் என்றாலே‌‌ கேவலமாக பார்க்கும் இந்த சமூகத்தில்.எனக்கு உதவயாரும் இல்லை.என் பெண் பிள்ளையை மனதில் கொண்டு எனக்கு உதவிடுமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் . நான் சொல்வது உண்மை .என்பதற்கு தங்களின் பார்வைக்கு  சில புகைப்படங்கள் அனுப்பி உள்ளேன்.இந்த பதிவிறக்கி  செவி சாய்த்து எனக்கு மகாத்மா காந்தி ஆட்டோ ஸ்டேண்டில் இடம் ‌வாங்கி தருமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 

இப்படிக்கு 

நிஷா

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment