| | | | | | | | | | | | | | | | | | |
விளையாட்டு Sports

சட்டவிரோத விளையாட்டு...! அரசு அதிரடி நடவடிக்கை...!

by Vignesh Perumal on | 2025-03-23 08:45 PM

Share:


சட்டவிரோத விளையாட்டு...! அரசு அதிரடி நடவடிக்கை...!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி கடன் தொல்லையால் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதால், ஆன் லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த 2022 ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்ததை உறுதி செய்தது. மேலும், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டான ரம்மி, போக்கர் (ஒரு வகையான சீட்டாட்டம்) விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்ததுடன், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2023ம் ஆண்டு உத்தரவிட்டது. 

புதிய விதிகள் கூறப்பட்டுள்ளதாவது: உயர் நீதிமன்ற உத்தரவின் படி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குமுறைபடுத்த விதிமுறைகளை வகுத்து 2025 பிப்ரவரி 14ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதில், பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கெடுக்க 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல, ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் பங்கெடுப்போர் ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாடும் போது, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியை ஏற்படுத்தவும், விளையாடுவோர் ஒரு நாளைக்கு, ஒரு வாரத்துக்கு, ஒரு மாதத்துக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பணம் வைத்து விளையாட வேண்டும் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், ஆன்லைன் விளையாட்டு அடிமைப்படுத்தும் எனவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் விதிகளில் இருந்தது.


இந்நிலையில் தற்போது, சட்டவிரோதமாக இயங்கி வந்த 357 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களை ஒன்றிய அரசு முடக்கியது. மேலும், சட்டவிரோத விளையாட்டு இணையதளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, 2,500 வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.126 கோடியை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment