by Vignesh Perumal on | 2025-03-21 06:32 PM
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்துக்குட்பட்ட 7 வனச்சரகங்களில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதன்படி கொடைக்கானல் வனச்சரகம், பேரிஜம் வனச்சரகம், மன்னவனூர் வனச்சரகம், பூம்பாறை வனச்சரகம், பெரும்பள்ளம் வனச்சரகம், தேவதானப்பட்டி, பழனி ஆகிய வனச்சரகங்களில் 27க்கும் மேற்பட்ட இடங்களில் இப்பணி நடந்தது. இந்த கணக்கெடுப்பின்படி கொடைக்கானல் வனப்பகுதிகளில் 200 வகையான பறவை இனங்கள் உள்ளதும், கொடைக்கானல் மலைப்பகுதியில் 3,500க்கும் மேற்பட்ட பறவைகள் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.
வேறு எந்த மலைப்பகுதிகளிலும் இல்லாத அரிய பறவை இனங்களான கிரே ஹெட்டட் கென்னறி, பிளை கேட்சிங், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சிங், யுரேஷியன் பிளாக் பேர், கமிட்டர் வாபுலர், நீலகிரி பிளை கேட்சிங், ஓரியண்டல் ஒயிட் ஐ, பழனி லாபிங் திரஸ், பார்விங் பிளை கேட்சர், ஸ்டிக்கில்டு ப்ளூ பிளை கேட்ச்சர், ரஸ்டி டைல்டு பிளைட் கேட்ச்சர் உள்ளிட்ட 25 அரிய வகை பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!