by admin on | 2025-03-02 11:39 AM
தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் இன்று மயிலாடுதுறையில் விஸ்வகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் கிருஷ்ணசாமி மாணிக்கம்மாள் தம்பதிகளுக்கு மகனாக1910' இல் இதே நாளில் பிறந்தவர் தியாகராஜன் திருச்சியில் நகை வேலை செய்து கொண்டிருந்த இவரை புதுக்கோட்டை ரயில் நிலையம் மாஸ்டர் நடேசன் அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் ஆக நடிக்க வைத்தார் இவரின் குரலைக் கேட்ட கர்நாடகா சங்கீத வித்வான் பொண்ணு ஐயங்கார் கர்நாடக இசையை கற்பித்தார் தொடர்ந்து நான்கு மணி நேரம் கச்சேரி செய்து பாகவதர் பட்டம் பெற்றார் தியாகராஜன் பவளக்கொடி படத்தில் நடித்து22' பாடல்களை பாடி பிரபலமானார் நவீன சாரங்கதாரா சத்தியசீலன் உள்பட15' படங்களில் நடித்தார் ஹரிதாஸ் திரைப்படம் மூன்றாண்டுகள் தொடர்ந்து ஓடியது தன் நடிப்புக்காக கிடைத்த1' லட்சம் ரூபாயை விடுதலைப் போராட்ட நிதியாக வழங்கினார் இவருக்காகவே திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது லட்சுமி காந்தன் என்ற பிரபல எழுத்தாளர் கொலை வழக்கில் கைதாகி விடுதலை ஆனபின் மீண்டும் நடித்தார் ஈரல் நோயால் தன்49' வது வயதில்1959' நவம்பர்1' இல் காலமானார் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆவார் இவர்