| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா சங்கம் சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்......!!!

by admin on | 2025-03-01 09:18 PM

Share:


தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா சங்கம் சார்பில் இலவச வேலை வாய்ப்பு முகாம்......!!!

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா, தேனி கம்மவார் சங்க கல்வி நிறுவனங்கள், ஈக்வெட்டாஸ் டெவலப்மெண்ட் இனிசியடிவ் ட்ரஸ்ட் இணைந்து தேனி N.R.T நகரில் செயல்பட்டு வரும் கம்மவார் சங்கர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. இந்த முகாமிற்கு தமிழ்நாடு ஆர்ய வைசிய மகா சபா மாநில தலைவர் கோம்பை  ராமசுப்பிரமணி மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மாநில பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் தலைமை வகிக்க தேனி மாவட்ட ஆர்ய வைசிய மகா சபா மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாநில தலைவர் கஸ்தூரி ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க ஜாப் உத்சவ் திட்டத்தின் திட்ட தலைவர்கள் சதீஷ் பாபு, சமுத்ரா ராஜ்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்திருந்தனர். இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளர் சேகர் சிறப்பாக செய்திருந்தார். நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 50க்கும் மேற்பட்ட தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 250க்கும் மேற்பட்ட வேலை நாடுனர்கள் பங்கேற்றனர் இவர்களில் 70-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் கம்மவார் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆரிய வைசிய இளைஞரணி மாநில தலைவர் ராஜேஷ் குப்தா செயலாளர் மகாதேவன் பொருளாளர் நாகா கார்த்திக் ஈக்குவிடாஸ் டெவலப்மென்ட் இனிசியடிவ் டிரஸ்ட் நிர்வாகி குணசேகரன் , தேனி வாசவி கிளப் தலைவர் சரவணன் செயலாளர் பால நடராஜன் பொருளாளர் இந்ரஜித் வாசவி கிளப் வனிதா தலைவி ஷர்மிளா பொருளாளர் வைஷ்ணவி வாசவி கிளப் ஜாயின்ட் பிஆர்ஓ சுவாதி ஸ்ரீ, ஆண்டிபட்டி வாசவி கிளப் தலைவி மைத்ரேயி, முன்னாள் தலைவர்கள் லால் பகதூர் சாஸ்திரி  சத்யநாராயணன் ராம்குமார் நாகராஜன் சரவணன் நாகராஜ் கார்த்திக் DPO ஸ்ரீ வித்யா பாலாஜி மற்றும் ஆண்டிபட்டி வாசவி கிளப் நிர்வாகிகள், தமிழ்நாடு ஆரிய வைசிய மகிளா விபாக் மாவட்டத் தலைவி லதா மணிகண்டன், செயலாளர் ஷ்யாமலட்சுமி,  பொருளாளர்  சாகித்யா உள்ளிட்ட நிர்வாகிகள் 50க்கு மேற்பட்ட நிறுவனத்தார் மற்றும் வேலை நாடுனர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment