by admin on | 2025-06-20 09:33 PM
கோவையில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள வி எஸ் என் கார்டன் என்னும் குடியிருப்பு வாசிகள் மத்தியில் விநாயகர் கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்தக் கோவிலை தகர்க்க ஜேசிபி மற்றும் அரசு துறை அலுவலர்கள் வந்ததால் பரபரப்புஏற்பட்டது
இதனை அடுத்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அங்கு வந்து போராட்டம் வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள்... இதனை அடுத்து இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது அதன் பின்பு அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கோயிலை இடிக்கமாட்டோம் என்று வாக்குறுதி தந்ததால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நிருபர் உதய ராணி கோவை.