by Vignesh Perumal on | 2025-05-15 10:38 AM
சென்னையில் இன்று (மே 15, 2025) ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.70,440-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.1,560 குறைந்து, ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் அளவில் பார்க்கும்போது, நேற்று ஒரு கிராம் ரூ.8,805-க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்று ரூ.195 குறைந்து ரூ.8,610-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை குறைவுக்கு சர்வதேச சந்தை நிலவரங்களே காரணம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று கணிசமான சரிவை சந்தித்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை கடைகளில் இன்று கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், விலை நிலவரம் தொடர்ந்து மாறுபடக்கூடியது என்பதால், வாங்குவோர் சற்று பொறுத்திருந்து முடிவெடுப்பது நல்லது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!