| | | | | | | | | | | | | | | | | | |
POLITICAL Naam Tamilar Katchi

சீமான் குறித்து விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை

by admin on | 2025-01-30 06:17 PM

Share:


சீமான் குறித்து விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை

சீமான் குறித்து விடுதலைப் புலிகள் பரபரப்பு அறிக்கை

சீமான் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களை சந்தித்தது உண்மை. ஆனால் புகைப்படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும், பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அன்பார்ந்த மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட விரும்புகின்றோம்.

நாங்கள் இந்தியாவுக்கோ, தமிழக மக்களுக்கோ என்றும் எதிரானவர்கள் அல்ல மாறாக எமது விடுதலைப் போராட்டத்திற்கு பின்னால் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது.பொய்ப் பிரச்சாரங்களையும், பொய்யான புகைப்படங்களையும், பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், எமது தேசியத் தலைவரையும், விடுதலைக்கான பயணத்தையும் மழுங்கடிக்கும் நோக்கத்தோடு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் மோசடிகள் எமக்கு மிகவும் வருத்தமளிக்கிறது

இன்று பலராலும் பேசப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறது

விடுதலைப் புலிகளின் பெயராலோ, தேசியத் தலைவரின் பெயராலோ, தமிழ் தேசியம் என்ற பேரிலும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி பங்களிப்பு வழங்க வேண்டாம்


-எல்டிடிஇ அமைப்பின் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் அறிக்கை

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment