by Vignesh Perumal on | 2025-04-23 09:21 AM
தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம் மருத்துவமனையின் வார்டு எண் 20 மற்றும் 21 இல் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிப் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது மருத்துவ தேவைகளை இலவசமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
குறிப்பாக, இந்த மருத்துவ முகாமில் முடநீக்கியல் பிரிவு மருத்துவர்கள் மற்றும் பிற சிறப்பு மருத்துவர்களும் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் அளிக்கின்றனர்.
எனவே, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிப் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!