by Vignesh Perumal on | 2025-04-06 12:59 PM
ஊட்டியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் அந்த உரையில் அவர் கூறியதாவது: "திரும்பிய பக்கம் எல்லாம் இயற்கை எழில், உதகைக்கு வந்ததால் பெருமையடைகிறேன். திமுக ஆட்சியில், நீலகிரியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. பழங்குடியின மக்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது. கூடலூர் பகுதியில் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆதரவோடு வளர்ச்சியை நோக்கி திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது. இந்தியாவில் பட்டினி சாவு இல்லாத மாநிலம் என நிரூபித்துள்ளோம். நாட்டிலேயே தமிழ்நாடு அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தியாவில் பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் என நிரூபித்துள்ளோம். வாகனங்கள் செல்லாத பகுதிகளில் கூட, மக்களை தேடி மருத்துவம் சென்றுள்ளது. வனவிலங்கு தாக்கி இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
நீலகிரியில் வீடில்லாதவர்களுக்கு ரூ.26 கோடியில் கூடலூரில் கலைஞர் நகர் உருவாக்கப்படும். பட்டினிச்சாவே இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறோம். நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா...?
நீலகிரி நிகழ்ச்சியால், பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதை நான் பிரதமர் மோடியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என தமிழக மண்ணில் இருந்து பிரதமர் மோடி உறுதி அளிக்க வேண்டும்.
இந்தி திணிப்பு மற்றும் சிறப்பு நிதியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. வக்பு திருத்த சட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்தது. தொகுதி மறுசீரமைப்பு - பிரதமர் வாக்குறுதி அளிக்க வேண்டும். வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆ.ராசா மூலம் வழக்கு தொடரப்படும்" என்று தெரிவித்தார்.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!