by Vignesh Perumal on | 2025-04-04 08:19 AM
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன், இந்தியன் 2, தொடர்ந்து தற்போது 'இந்தியன் 3' தயாரிக்க லைகா நிறுவனம் அனுமதி கொடுத்துள்ளது. மேலும், படப்பிடிப்பு தொடர்பான வேலைகள் மீண்டும் தொடங்க உள்ளது.
அதாவது, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'இந்தியன் 2' படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இரண்டாம் பாகம் எடுத்து வந்த போதே அதை மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டார்கள். 'இந்தியன் 3' படம் இந்த வருடத்தில் வெளியாகும் என்றும் தகவல் வெளியானது.
அச்சமயம், 'இந்தியன் 2' தோல்வியால் 'இந்தியன் 3' குறித்து பல வதந்திகள் வெளிவந்தன. படம் வரவே வராது என்றும், அப்படியே வந்தாலும் நேரடி ஓடிடி வெளியீடு என்றும் செய்திகள் பரவின.
சென்ற வாரம் வெளியான 'எல் 2 எம்புரான்' படத்திலிருந்தும் லைகா நிறுவனம் வெளியே வந்துள்ளது. அந்தப் படத்திற்கு லைக்காவின் பங்குகள் அனைத்தையும் கோகுலம் நிறுவனம் பெற்றதாக தகவல் வந்தன. அதனால், லைகா நிறுவனம் மூடப்பட உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பல்வேறு வதந்திகளுக்கு பதில் சொல்லும் விதமாக தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 'இந்தியன் 3' படத்தை 'தக் லைப்' படத்திற்குப் பிறகு வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, படத்திற்கு இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் நடத்த உள்ளதாகவும், விரைவில் கமல்ஹாசனை சந்தித்து இதற்கான தேதிகளைப் பெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!
ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைவ்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!
பல இடங்களில் அதிமுக டெபாசிட் இழக்கும்? லயோலா கருத்துக்கணிப்பில் பகீர் ! அதிமுகவினர் அதிர்ச்சி !!