by satheesh on | 2026-02-18 01:27 PM
ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல : கே.சி. வேணுகோபால் :
கே.சி. வேணுகோபால் பேட்டி: ஆட்சியில் பங்கு என்பது கட்சியின் நிலைப்பாடு அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். சென்னை முகப்பேரில் நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு மாநில தலைவர் செல்வப்பெருந்தகையுடன் இணைந்து கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுடன் பேசியதாவது: 'நாங்களும் ஒரு அரசியல் கட்சிதான். எங்களுக்கு லட்சியங்கள் உள்ளன. பொதுவெளிகளில் கூட்டணி குறித்து கூறப்படும் கருத்துகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அது கட்சியின் நிலைப்பாடு அல்ல. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேசக்கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுகவிடம் எங்கள் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறி இறுதி முடிவு எடுக்கப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் கட்டுரையாளர் ராஜசிம்மன்.....!!!
மேகமலை வன சரணாலயம் மலைவாழ் மக்கள் குறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி...???
உலக தாய்ப்பால் வார விழா பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்.....!!!
மேகமலை மலை கிராம மக்கள் தேனி கலெக்டர் அலுவலகம் முற்றுகை...!!! போராட்டம் தீவிரம்....!!!"
தேனி கலெக்டர் வைத்தியநாதன் ஆய்வு....!!!!!