by Vignesh Perumal on | 2025-09-16 03:37 PM
தேனி மாவட்டம், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஒன்றிணைத்து, தொண்டர்களால் வைக்கப்பட்ட விளம்பர பதாகை ஒன்று, அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதாகையில், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். படங்கள் மட்டுமின்றி, சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன.மேலும், "தமிழகத்தைக் காப்போம்", "கழகத்தை ஒன்றிணைப்போம்", "பிரிந்துள்ள தொண்டர்களை தலைவர்களே ஒன்று சேருங்கள்", "2026-ல் வென்றிடுவோம்" போன்ற வாசகங்கள் இந்தப் பதாகையில் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விளம்பர பதாகை, அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் போக்குவதோடு, 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, கட்சியினர் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. அ.தி.மு.க. தலைமை, சமீப காலமாக கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளைப் போக்க நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த பதாகை மேலும் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்