by Vignesh Perumal on | 2025-09-16 11:25 AM
மகாராஷ்டிர மாநிலம், சத்தாரா மாவட்டத்தில் 27 வயதான ஒரு பெண், ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை என 4 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதன் மூலம், அவருக்குத் தற்போது மொத்தம் 7 குழந்தைகள் உள்ளனர்.
இந்த அபூர்வமான நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்கு இது மூன்றாவது பிரசவம். ஏற்கனவே முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளையும், இரண்டாவது பிரசவத்தில் ஒரு குழந்தையையும் அவர் பெற்றெடுத்துள்ளார்.
ஒரு பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு. தாயும், புதிதாகப் பிறந்த குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, பலரின் வாழ்த்துகளைப் பெற்று வருகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்