by Vignesh Perumal on | 2025-09-16 11:10 AM
2025-26ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மேலும் ஒரு நாள் நீட்டித்துள்ளது. ஏற்கெனவே செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்த இந்தக் காலக்கெடு, தற்போது செப்டம்பர் 16, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோர் மற்றும் வரி ஆலோசகர்களின் கோரிக்கைகளை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை தெரிவித்துள்ளது. வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில் சந்திக்கும் தொழில்நுட்பச் சிக்கல்களையும், அதிக அளவிலான விண்ணப்பங்களையும் கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பழைய காலக்கெடு ஜூலை 31, 2025 வரை வழங்கப்பட்டது. அதன் பின்னர் முதல் நீட்டிப்பு செப்டம்பர் 15, 2025 நீட்டிக்கப்பட்டது. தற்போது புதிய காலக்கெடு செப்டம்பர் 16, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வி. ராஜிதா வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், இந்தக் காலக்கெடு நீட்டிப்பு தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். வரி செலுத்துவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்