by Vignesh Perumal on | 2025-09-16 10:58 AM
முன்னாள் அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இராமசாமி படையாட்சியாரின் 108வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 16, 2025) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டி மாளிகையில் உள்ள இராமசாமி படையாட்சியாரின் சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சுதந்திரப் போராட்ட வீரராகவும், வன்னியர் சமுதாயத்தின் முக்கியத் தலைவராகவும் அறியப்பட்ட இராமசாமி படையாட்சியார், தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், அவர் உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றன.
ஆசிரியர்கள் குழு....