| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

வாகன ஓட்டிகளே உஷார்...! ஜீப்ரா கிராசிங் மாறுபாடு...! போலீஸ் புதிய விதிகள் வெளியீடு...!

by Vignesh Perumal on | 2025-09-14 02:26 PM

Share:


வாகன ஓட்டிகளே உஷார்...! ஜீப்ரா கிராசிங் மாறுபாடு...! போலீஸ் புதிய விதிகள் வெளியீடு...!

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, மயில் ரவுண்டானா மற்றும் ரணகாளியம்மன் கோயில் சந்திப்புகளில் புதிய சிக்னல்கள் அமைக்கப்பட்டு சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து, பழனி உட்கோட்ட காவல் துறை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

அனைத்து சிக்னல்களிலும், 'ஜீப்ரா கிராசிங்' எனப்படும் பாதசாரிகள் கடக்கும் கோட்டுக்கு முன்பாக உள்ள வெள்ளை நிறக் கோட்டிற்குள் வாகனங்களை நிறுத்த வேண்டும். பாதசாரிகளின் பாதுகாப்புக்காக உள்ள 'ஜீப்ரா கிராசிங்' மீது வாகனங்களை நிறுத்தக் கூடாது.

மஞ்சள் சிக்னல் வரும்போது தயாராக இருக்க வேண்டும். பச்சை சிக்னல் வந்தவுடன் உடனடியாக வாகனங்களை நகர்த்த வேண்டும்.


விதிகளை மீறும் வாகன ஓட்டிகள், சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

இனிமேல் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, மற்றும் ஆயக்குடி, சத்திரப்பட்டி ஆகிய நகரங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், செல்லம் கேண்டீன் ஹோட்டல் எதிரே உள்ள சாலை வழியாக உள்ளே சென்று, காந்தி சிலை வழியாக வெளியேற வேண்டும்.

பேருந்துகளைத் தவிர மற்ற வாகனங்கள், 'ஃப்ரீ லெஃப்ட்' பாதையைப் பயன்படுத்தி காந்தி சிலை, தேவர் சிலை வழியாகச் செல்லலாம். இந்த வழியாக வரும் வாகனங்கள் வேல் ரவுண்டானா வழியாகச் சென்று, குளத்துரோடு அருகில் உள்ள பேருந்து நிலைய நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று, அதே வழியாக வெளியே வர வேண்டும். இந்த வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் வேல் ரவுண்டானா வழியாக உள்ளே சென்று, வெளியே செல்லும்போது செல்லம் கேண்டீன் ஹோட்டல் வழியாகச் செல்ல வேண்டும். மயில் ரவுண்டானா மற்றும் ஆர்.எஃப். ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் இருசக்கர வாகன ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். கடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களும், வாகனங்களை இடையூறாக நிறுத்துவோரும் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும்.

மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் (நான்கு சக்கர வாகனங்கள்), இந்த வழியாகச் செல்லும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும், புது தாராபுரம் சாலையில் ஆர்.சி. சர்ச்சிற்கு எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று, சஞ்சய் மருத்துவமனை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, சாமி தியேட்டர் வழியாகச் செல்ல வேண்டும். இது ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி மார்க்கமாக வரும் வாகனங்கள், இந்த வழியாக பழனி வரும் வாகனங்கள், சாமி தியேட்டர், ரணகாளியம்மன் கோயில் சந்திப்பு, வேல் ரவுண்டானா வழியாகச் செல்ல வேண்டும். இதுவும் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் ரணகாளியம்மன் சந்திப்பில் உள்ள கே.வி.என். பேக்கரி வழியாக நேரடியாகச் செல்லலாம். மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் ஆர்.சி. சர்ச்சிற்கு எதிரே உள்ள சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிறுத்தத்தில் மட்டுமே நிற்கும். அதேபோல், தொப்பம்பட்டி, தாராபுரம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் ரணகாளியம்மன் கோயில் அருகில் உள்ள விவேகா ஏஜென்ஸி முன்பு உள்ள தற்காலிகப் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும். சஞ்சய் மருத்துவமனை சந்திப்பிலிருந்து ரணகாளியம்மன் கோயில் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.


இந்த புதிய போக்குவரத்து விதிகள், செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் முழு நேரமாகச் செயல்படும் என காவல் துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




ஆசிரியர்கள் குழு.......

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment