by Vignesh Perumal on | 2025-09-13 03:35 PM
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே 15 வயதுச் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக, கரூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு 15 வயதுச் சிறுமியை, கரூரைச் சேர்ந்த சிவசக்தி (24) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அந்தச் சிறுமியை அவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது குறித்துச் சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிவசக்தி குற்றம் செய்தது உறுதியானதை அடுத்து, அவரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசக்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை அ.ரசு தீவிரமாக க.ட்டுப்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள், குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
ஆசிரியர்கள் குழு.....